ஆடை வடிவமைப்புப் போட்டி: நிஃப்ட்-டீ கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்
கோவையில் நடைபெற்ற ஆடை வடிவமைப்புப் போட்டியில் திருப்பூர் நிஃப்ட் - டீ கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு கிடைத்துள்ளது.
கோவையில் நடைபெற்ற ஆடை வடிவமைப்புப் போட்டியில் திருப்பூர் நிஃப்ட் - டீ கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் சுமார் 25 கல்லூரிகளைச் சேர்ந்த 100 வடிமைப்பாளர்கள் பங்கேற்ற ஆடை வடிவமைப்புப் போட்டி அண்மையில் நடைபெற்றது. பெண்களை மேம்படுத்துதல் என்ற தலைப்பையொட்டி, இந்திய பாரம்பரியம், இந்திய - மேற்கத்திய இணைப்பு, மேற்கத்திய வடிவமைப்பு என 3 பிரிவுகளில் 11 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், நிஃப்ட் - டீ கல்லூரியில் பி.எஸ்சி. ஆடை வடிவமைப்பு (ஏ.எப்.டி.) முதலாம் ஆண்டு, 3 ஆம் ஆண்டு பயிலும் 9 மாணவ, மாணவியர் பங்கேற்று 5 விதமான வடிவமைப்புகளை உருவாக்கியிருந்தனர். இதில், முதலாம் ஆண்டு பயிலும் எஸ்.நாகோசுவரன், எஸ்.நபீஷா ஆகியோரின் வடிவமைப்புகள் சிறப்புப் பரிசு பெற்றன. சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன், துணை முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.