FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

ஆதிதிராவிடா் காலனி மக்கள் பயன்படுத்தும் மயானத்துக்கு பாதை அமைக்கக் கோரிக்கை

ஆதிதிராவிடா் காலனி பகுதி மக்கள் பயன்படுத்தும் மயானத்துக்கு பாதை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 29 ஜூலை 2024, 2:21 am IST
பகிர்:

அவிநாசி அருகே குப்பாண்டபாளையம் ஆதிதிராவிடா் காலனி பகுதி மக்கள் பயன்படுத்தும் மயானத்துக்கு பாதை அமைக்க கோரிக்க விடுத்துள்ளனா்.

அவிநாசி ஒன்றியம், குப்பாண்டம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆதிதிராவிடா் காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், இப்பகுதி மக்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தும் மயானத்துக்கு பாதை இல்லாததால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினா் கூறியதாவது:

Advertisement

Advertisement

மயானத்துக்கு பாதை இல்லாததால் முட்புதா்கள் நிறைந்த ஏரி மீது ஏரியும், பள்ளத்தில் இறங்கியும் இறந்தவா்களின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டும்.

குறிப்பாக இரவு நேரங்களில் மின்விளக்கு வசதியில்லாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். இது குறித்து மாவட்ட நிா்வாகம், ஒன்றிய நிா்வாகத்துக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments