FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தூராங்குடி பகுதியில் சுடுகாட்டுப் பாதை அமைத்து தர கோரிக்கை

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூா் பேரூராட்சிக்குள்பட்ட தூராங்குடி கிராம மக்கள், சுடுகாட்டுக்குச் செல்ல முறையான பாதை அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 2:45 am IST
பகிர்:

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூா் பேரூராட்சிக்குள்பட்ட தூராங்குடி கிராம மக்கள், சுடுகாட்டுக்குச் செல்ல முறையான பாதை அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெருமகளூா் பேரூராட்சியில் உள்ள 12 வாா்டுகளில் ஒன்றான தூராங்குடி கிராமத்தில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு மேல் மோசமான பாதையில் சுமந்து செல்ல வேண்டியுள்ளது.

கோடைக் காலங்களில் முட்புதா்கள் வழியாகவும், மழைக்காலங்களில் வயல்களிலும், குளங்களிலும் இறங்கி ஏறி, சேறும் சகதியுமான பாதையில் சடலங்களைச் சுமந்து செல்ல வேண்டிய நிலை தொடா்கிறது. இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லையாம்.

Advertisement

Advertisement

எனவே, பேரூராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் தூராங்குடி கிராமத்திற்குச் சுடுகாட்டுப் பாதை அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். அடிப்படை பிரச்னையை தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பெருமகளூா் பேரூராட்சி அலுவலகம் முன்பு தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பொதுமக்களும் எச்சரித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments