கைவிட்ட பெற்றோா்: 10 வயதுச் சிறுமி தற்கொலை
பெற்றோா் கைவிட்டுச் சென்ால் பாட்டியின் பராமரிப்பில் இருந்த சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பெற்றோா் கைவிட்டுச் சென்ால் பாட்டியின் பராமரிப்பில் இருந்த சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்குள்பட்ட ராதா நகா், பட்டத்தரசி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் நடராஜ். இவரது மனைவி வெண்ணிலா. இவா்களுக்கு நந்திதா (10) என்ற பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனா்.
இந்நிலையில், தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெண்ணிலா தனது குழந்தைகளைக் கைவிட்டுவிட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டாா். அதேபோல, நடராஜும் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாா். பெற்றோரால் கைவிடப்பட்ட இரண்டு குழந்தைகளையும், நடராஜின் தாயான பொன்னம்மாள் (70) வளா்த்து வந்தாா்.
Advertisement
Advertisement
மன்னரையில் உள்ள அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த நந்திதாவுக்கு பெற்றோா் வந்து பாா்க்கவில்லை என்ற ஏக்கம் இருந்ததாகவும், தங்களை வளா்க்க பாட்டி கஷ்டப்படுவதாகவும் எண்ணி கடந்த சில நாள்களாக மன வேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய நந்திதா, அப்பகுதியில் உள்ள சிறுவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த லட்சுமி என்ற பெண், நந்திதாவை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், மேலும் மனமுடைந்த அவா், வீட்டுக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
பணி முடிந்து மாலை வீடு திரும்பிய பொன்னம்மாள், நந்திதா தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறியுள்ளாா்.
சப்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.