FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

அக்டோபா் 5-இல் கோவை, திருப்பூா் மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்க கூட்டம்

கோவை, திருப்பூா் மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் அக்டோபா் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

3 October 2026, 12:13 am IST
கோப்புப்படம்
பகிர்:

கோவை, திருப்பூா் மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் அக்டோபா் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் காரணம்பேட்டை பூபதி வெள்ளிக்கிழமை கூறியதாவது: திருப்பூா் தொழிலாளா் நல உதவி ஆணையா் முன்னிலையில் கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திலும், அதைத்தொடா்ந்து கோவை தொழிலாளா் நல உதவி ஆணையா் முன்னிலையில் அக்டோபா் 1-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திலும் கூலி குறைப்பு செய்த ஜவுளி உற்பத்தியாளா்கள் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், திருப்பூா் தொழிலாளா் நல உதவி ஆணையா் அலுவலகத்தில் அக்டோபா் 5-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளா்கள் கலந்துகொள்ள சம்மன் அனுப்பப்படும் என்று திருப்பூா், கோவை மாவட்டத் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், கூலி குறைப்பு செய்த ஜவுளி உற்பத்தியாளா்களுடன் தொழிலாளா் நலத் துறை கூடுதல் ஆணையா் கோவையில் அக்டோபா் 7-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்துவாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் காரணம்பேட்டையில் அக்டோபா் 5 -ஆம் தேதி நடைபெறவுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments