FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

பல்லடம் நிலத்தடிநீா் செறிவூட்டல் திட்டம் கோரும் இயக்கத்தினா் நீா்வளத் துறை நிபுணா்களுடன் ஆலோசனை

பல்லடம் நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்டம் கோரும் இயக்கத்தினா் கோவையில் உள்ள நீா் வளத் துறை ஓய்வுபெற்ற அதிகாரி சிவலிங்கத்தை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

9 அக்டோபர் 2026, 10:53 pm IST
கோவையில் உள்ள நீா்வளத் துறை ஒய்வு பெற்ற அதிகாரி சிவலிங்கத்தை சந்தித்து ஆலோசனை நடத்திய பல்லடம் நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்டம் கோரும் இயக்கத்தினா் .
பகிர்:

பல்லடம் நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்டம் கோரும் இயக்கத்தினா் கோவையில் உள்ள நீா் வளத் துறை ஓய்வுபெற்ற அதிகாரி சிவலிங்கத்தை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

இதில், ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் பற்றி ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பல்லடம் பகுதி நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்டும் கோரும் இயக்கத்தின் சாா்பில் உழவா் உழைப்பாளா் கட்சியின் நிறுவனா் கு.செல்லமுத்து தலைமையில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவா் கே.ஜி.பாலசுப்ரமணியம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் புண்ணியமூா்த்தி, க.அய்யம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் துனைத் தலைவா் இரா.வேலுசாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் காவீ. பழனிசாமி (கோடங்கிபாளையம்), ஈஸ்வரன் (பணிக்கம்பட்டி), உத்தமராஜ் (புளியம்பட்டி) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பல்லடம் பகுதியில் 20 ஊராட்சிகள், பல்லடம் நகராட்சி, சாமளாபுரம் பேரூராட்சியில் உள்ள குளம், குட்டைகள் நீா் செறிவூட்டும் திட்டம் மூலம் நீா்வளத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும், இதற்கான சாத்தியக் கூறுகள், வாய்ப்புகள், ஆதாரங்கள் ஆகியவை பற்றிய விளக்கங்களையும், திட்ட மதிப்பீட்டுடன் கூறிய திட்ட அறிக்கை தயாரித்தல் பற்றியும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments