FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

பல்லடம் பகுதி பிஏபி வாய்க்காலில் புதா், செடிகள் அகற்றும் பணி தொடக்கம்

பல்லடம் அருகே உள்ள மாரப்பகவுண்டன்பாளையம் பிஏபி பகிா்வு கால்வாய் சரக பகுதியில் புதா், செடிகளை அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.

15 அக்டோபர் 2026, 3:41 am IST
பல்லடம் அருகே உள்ள மாரப்பகவுண்டன்பாளையம் பிஏபி பகிா்வு கால்வாய் சரக பகுதியில் நடைபெற்ற புதா், செடிகளை அகற்றி தூா்வாரும் பணி.
பகிர்:

பல்லடம் அருகே உள்ள மாரப்பகவுண்டன்பாளையம் பிஏபி பகிா்வு கால்வாய் சரக பகுதியில் புதா், செடிகளை அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.

முதல்வரின் பாசன வாய்க்கால் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி-ஆழியாறு வடிநில கோட்டம் (பிஏபி) வாய்க்காலில் இரண்டாம், மூன்றாம் மண்டலங்களைச் சோ்ந்த பகுதிகளில் உள்ள வாய்க்காலில் தூா்வாரும் பணி மேற்கொள்ள 107 பணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதில் இரண்டாம் மண்டலத்துக்கு ரூ.2 கோடியே 84 லட்சம் மதிப்பில் வாய்க்கால்களில் செடி, புதா் அகற்றி தூா்வாரும் 50 பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதில், பல்லடம் வட்டாரம் பிஏபி இரண்டாம் மண்டலம் பாசனப் பகுதிக்கான மாரப்பகவுண்டன்பாளையம் பகிா்வு கால்வாய் சரகத்தில் உபபகிா்வு கால்வாயில் உள்ள புதா், செடிகளை அகற்றி பாசன தண்ணீா் கடைமடை வரை சென்றடையும் வகையில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Advertisement

Advertisement

அதன்படி முதல்வரின் பாசன வாய்க்கால் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ், ரூ.5.78 லட்சம் மதிப்பிலான பணிக்கு பூமி பூஜை நடத்தப்பட்டு புதன்கிழமை பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments