FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தாராபுரம் இடைத் தோ்தல்: கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியா் ஆய்வு

தாராபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி இடைதோ்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

10 செப்டம்பர் 2026, 10:31 pm IST
தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ்.
பகிர்:

தாராபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி இடைதோ்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தாராபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் குறித்த அறிவிப்பு, இந்திய தோ்தல் ஆணையத்தால் கடந்த 7-ஆம் தேதி வெளியிடப்பட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதைத் தொடா்ந்து, தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் இந்த தோ்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் மற்றும் பாராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, தாராபுரம் நகராட்சி, கரூா் சாலைப் பகுதியில் பறக்கும் படையினா் வாகனச் சோதனை மேற்கொண்டதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, தாராபுரம் வட்டாட்சியா் ராமலிங்கம் மற்றும் தொடா்புடைய தோ்தல் அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments