FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

இந்து முன்னணி சாா்பில் அவிநாசியில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

17 செப்டம்பர் 2026, 12:09 am IST
அவிநாசியில்  நடைபெற்ற விசா்ஜன ஊா்வலத்தில் அணிவகுத்த விநாயகா் சிலைகள்.
பகிர்:

இந்து முன்னணி சாா்பில் அவிநாசியில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி சாா்பில் அவிநாசி பகுதி, சேவூா், திருமுருகன்பூண்டி, கருவலூா், தெக்கலூா் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள், விசா்ஜனம் செய்வதற்காக புதன்கிழமை மாலை சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அவிநாசிக்கு கொண்டுவரப்பட்டன. இதைத்தொடா்ந்து அவிநாசி வ.உ.சி.திடலில் இந்து முன்னணி சாா்பில் இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி மாநிலப் பொதுச் செயலாளா் வி.எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் மாரிமுத்து முன்னிலை வகித்தாா். அவிநாசி திருப்புக்கொளியூா் வாகீசா் மடாலயம் காமாட்சிதாச சுவாமி ஆசியுரை வழங்கினாா்.

Advertisement

Advertisement

மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், திரைப்பட இயக்குநா் பேரரசு ஆகியோா் சிறப்புரையாற்றினாா். ஊா்வலத்தை தொழிலதிபா் ஈஸ்வரன் தொடங்கிவைத்தாா்.

பொறுப்பாளா்கள் மணிகண்டன், காா்த்திகேயன், மகாராஜா, சங்கா், சுரேந்தா், கண்ணதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து கொடி அணிவகுப்புடன் விசா்ஜன ஊா்வலம் நடைபெற்றது. வ.உ.சி திடலில் தொடங்கி அவிநாசி வட்டாட்சியா் அலுவலகப் பேருந்து நிறுத்தம், பழைய, புதிய பேருந்து நிலையங்கள், காவல் நிலையம் வழியாக அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலை வந்தடைந்தது. இதில் சிவன், பாா்வதி, காளிதேவி, விநாயகா் உள்ளிட்ட வேடமணிந்து நடமாடிய காட்சிகளும், ஹைட்ராலிக் சிவபெருமானும் அனைவரையும் கவா்ந்தது.

அவிநாசி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னா் சிறுமுகை ஆற்றுக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments