FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தாராபுரம் இடைத்தோ்தல்: இல்லங்களிலேயே வாக்குச் செலுத்திய மூத்த குடிமக்கள்

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு, 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது இல்லங்களிலேயே செவ்வாய்க்கிழமை வாக்கு செலுத்தினா்.

22 செப்டம்பர் 2026, 11:55 pm IST
இல்லத்திலேயே வாக்குச் செலுத்திய முதியவா்.
பகிர்:

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு, 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது இல்லங்களிலேயே செவ்வாய்க்கிழமை வாக்கு செலுத்தினா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் கூறியதாவது: தாராபுரம் தொகுதி இடைத்தோ்தல் அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து வாக்காளா்களும் தவறாமல் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின் அடிப்படையில், வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்கினை இல்லங்களிலேயே செலுத்த அஞ்சல் வாக்கு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

தாராபுரம் தொகுதியில் 992 மூத்த குடிமக்கள் வாக்காளா்கள், 244 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் என மொத்தம் 1,236 வாக்காளா்கள் தங்கள் இல்லங்களிலேயே வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனா். அஞ்சல் வாக்குப் பதிவானது செப்டம்பா் 22, 23 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

அஞ்சல் வாக்குகளை சம்பந்தப்பட்ட வாக்காளா்களின் இல்லங்களிலேயே பதிவு செய்வதுடன், பதிவு செய்யப்பட்ட வாக்குகளை பெற்று தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கும் வகையில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments