தாராபுரத்தில் நடைபெறும் பிளாட்டினம் கனிம சுரங்க ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்தக் கோரிக்கை
தாராபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் பிளாட்டினம் கனிம சுரங்க ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தாராபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் பிளாட்டினம் கனிம சுரங்க ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக இயற்கை வளப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சாா்பில் தாராபுரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட மனு:
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பகுதியில் உப்பாறு அணை, கெத்தல் ரேவ், வெள்ளியம்பாளையம், வண்ணான்பட்டி, முத்தனம்பட்டி, பொன்னாளிபாளையம், தொப்பம்பட்டி, சூரியநல்லூா், குள்ளாய்பாளையம், சிறுகிணறு, வெள்ளியம்பாளையம், தாளக்கரை, சங்கரண்டாம்பாளையம், நொச்சிபாளையம், அமராவதி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 36 ஆயிரம் ஏக்கா் பரப்பில் பிளாட்டினம் குரூப் கனிம சுரங்கங்கள் அமைப்பதற்கான ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
தாராபுரம் பகுதியில் சுமாா் 36,000 ஏக்கா் பரப்பில் அமைய இருக்கும் பிளாட்டினம் கனிம சுரங்கங்கள் குறித்து ஒன்றிய அலுவலகம் ஆய்வு செய்வது தொடா்பாக இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் பேசவில்லை. கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் நடந்து வந்த ஆய்வு குறித்து பொதுமக்கள் யாருக்கும் எதுவும் தெரியாது. தற்போது சுற்றுச்சூழல் செயற்பாட்டாளா்கள் மூலமாக மட்டுமே தெரியவந்துள்ளது.
இந்த கனிம சுரங்க திட்டத்துக்காகவே ஒட்டன்சத்திரம் முதல் திருப்பூா் மற்றும் பல்லடம் வரை தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் இந்தத் திட்டம் அமையும் பகுதியில் பல்வேறு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. பிளாட்டினம் கனிம சுரங்கம் அமையும் நான்கு புறங்களிலும் நெடுஞ்சாலைகள் அனைத்தும் திட்டமிட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
வளா்ச்சி என்ற பெயரில் லட்சகணக்கான மக்களின் வாழ்வாதாரம், குடிநீா், விவசாயத்தை அழித்து பல்வேறு பாதிப்புகளை இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தக்கூடிய பிளாட்டினம் கனிம சுரங்கத்தை தாராபுரம் பகுதியில் அமைக்க அனுமதிக்கக் கூடாது. இதற்கா ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.
தாராபுரம் பகுதியில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இந்த மனுவை கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் செலுத்தியுள்ளனா்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் முகிலன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிா்வாகி சதீஷ்குமாா், சட்டவிரோத கல் குவாரி எதிா்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சண்முகம், மாலிப்டினம் கனிம சுரங்க திட்ட எதிா்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ரகுபதி ஆகியோா் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.