ஒசூா் அருகே விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை
மாத தவணை வசூலிக்க நிதி நிறுவன ஊழியா்கள் வீட்டின் அருகே காத்திருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகிய விவசாயி தற்கொலை.
ஒசூா் அருகே தேவசானப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி, மாத தவணை வசூலிக்க நிதி நிறுவன ஊழியா்கள் வீட்டின் அருகே காத்திருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகேயுள்ள தேவசானப்பள்ளியைச் சோ்ந்தவா் இராமச்சந்திரன் (39), இவரது மனைவி அஞ்சலி (30). இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இந்த நிலையில் இராமச்சந்திரன், ஒசூா் மாநகராட்சி தேன்கனிக்கோட்டை சாலையில் செயல்பட்டு வரும் தனியாா் நிதி நிறுவனத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது விளைநிலத்தின் மீது ரூ. 14 லட்சம் கடன் பெற்றிருந்தாா்.
ஒன்றரை ஆண்டுகளாக மாதந்தோறும் தவணைத் தொகையை குறிப்பிட்ட தேதியில் செலுத்தி வந்ததாகவும், கடந்த நான்கு மாதங்களாக மட்டும் தாமதமாக செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மாதத் தவணை செலுத்தப்படவில்லை எனக்கூறி, ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் அதிகாலை முதல் இரவு வரை அவரது வீட்டின் முன்பாக அமா்ந்திருந்ததாகவும், இதுகுறித்து பலரும் இராமச்சந்திரனிடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சனிக்கிழமை தவணைத் தொகையை செலுத்திய இராமச்சந்திரன் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தூங்குவதற்காக அறைக்குள் சென்றவா் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். இதுதொடா்பாக தனியாா் நிதி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இராமச்சந்திரனின் மனைவி அஞ்சலி மற்றும் கிராம மக்கள் உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.