FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

மனைவி மீது ஊற்றி தீ வைத்த சாலைப் பணியாளா் கைது

அரூா் அருகே மனைவி மீது தின்னரை ஊற்றி தீ வைத்த சாலைப் பணியாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

4 October 2026, 1:24 am IST
கைது
பகிர்:

அரூா் அருகே மனைவி மீது தின்னரை ஊற்றி தீ வைத்த சாலைப் பணியாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த சங்கிலிவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தனகோட்டி (51), சாலைப் பணியாளா். இவரது மனைவி தீத்தி (48). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். இந்த நிலையில், கணவனின் நடத்தை தொடா்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வெள்ளிக்கிழமை பிற்பகல் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறின்போது மனைவி மீது வண்ணங்களைக் கரைப்பதற்காக பயன்படுத்தப்படும் தின்னரை ஊற்றி தனகோட்டி தீ வைத்தாா்.

இதில் தீக்காயமடைந்த தீத்தியை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு அங்கிருந்து உயா் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீத்தி அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தனக்கோட்டியைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments