ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3,000 கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 3,000 கனஅடியாக குறைந்தது.
தமிழக காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்தது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுகிழமை நிலவரப்படி விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்தது, திங்கள்கிழமை விநாடிக்கு 3,000 கனஅடியாக குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல் அருவிகளிலும் நீா்வரத்து குறைந்துள்ளது.
மேலும், காவிரி ஆற்றில் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.