FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4,000 கனஅடியாக அதிகரிப்பு

13 அக்டோபர் 2026, 1:13 am IST
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு - கோப்புப் படம்
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 4,000 கனஅடியாக அதிகரித்தது.

இருமாநில காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை அளவை பொறுத்து ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்தது, திங்கள்கிழமை காலை விநாடிக்கு 3,000 கனஅடியாகவும், மாலையில் 4,000 கனஅடியாகவும் அதிகரித்தது.

Advertisement

Advertisement

இதனால், ஒகேனக்கல் அருவிகளில் விழும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்தை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments