சிறுமி பலாத்காரம்: இளைஞா் மீது போக்ஸா சட்டத்தில் வழக்குப் பதிவு
தருமபுரியில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரியில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி, தருமபுரி நகரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா். இவருக்கும் அங்கு வந்து சென்ற போச்சம்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஸ்டாலின் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் தனிமையில் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது குடும்பத்தினா் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவ பரிசோதனையில் சிறுமி 3 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞா் ஸ்டாலின் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.