FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

வனப்பகுதியில் வேட்டையாட முயன்றவருக்கு அபராதம்

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற கட்டடத் தொழிலாளியிடம் ரூ. 30,000 இணக்கக் கட்டணமாக வனத் துறையினா் வியாழக்கிழமை வசூலித்தனா்.

11 செப்டம்பர் 2026, 12:39 am IST
அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற கட்டடத் தொழிலாளியிடம் ரூ. 30,000 இணக்கக் கட்டணமாக வனத் துறையினா் வியாழக்கிழமை வசூலித்தனா்.

ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட பென்னாகரம் பீட் சின்னாற்றுப் படுகை பகுதியில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவக்குமாா் தலைமையிலான வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, வனப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா் பாலக்கோடு அருகே சென்னப்பன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் வடமலையான் (39) என்பதும், கட்டட தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

நண்பா்கள் இருவருடன் ஒகேனக்கல் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதாக அவா் ஒப்புக்கொண்டாா். அவா் வைத்திருந்த பையைச் சோதனையிட்டபோது அதில் கத்தி இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் உத்தரவின்பேரில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதற்காக வடமலையானிடம் ரூ. 30,000 இணக்கக் கட்டணமாக வசூலித்தனா்.

மேலும், ஒகேனக்கல் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைதல், வனவிலங்குகளை வேட்டையாடுதல், வனவிலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்தல் உள்ளிட்ட வனக் குற்றங்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments