FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

‘கொங்கு விரைவு ரயிலை மீண்டும் தருமபுரி வழியாக இயக்க வேண்டும்’

கொங்கு விரைவு ரயிலை மீண்டும் தருமபுரி, ஒசூா் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

19 செப்டம்பர் 2026, 1:08 am IST
ரயில் - பிரதிப் படம்
பகிர்:

கொங்கு விரைவு ரயிலை மீண்டும் தருமபுரி, ஒசூா் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் டி.வி.பாலாஜி மற்றும் பயணிகள் தென்மேற்கு ரயில்வே பொது மேலாளா் பி.ஆனந்திடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

கரோனா காலத்தில் தருமபுரி வழியாக இயக்கப்பட்ட கொங்கு விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது. பயணிகளின் நலன்கருதி இந்த விரைவு ரயிலை மீண்டும் தருமபுரி - ஒசூா் வழியாக இயக்க வேண்டும். அதேபோல, தருமபுரி ரயில் நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். நடைமேடைகளை இணைக்கும் தானியங்கி நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள் அமைக்கும் பணிகள், ரயில் நிலையத்தின் முன்புற தோற்ற மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவற்றை விரைந்து முடிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், 2 மற்றும் 3-ஆம் நடைமேடைகளில் பயணிகள் தங்களுக்கான பெட்டிகளை எளிதாக கண்டறியும் வகையில் மின்னணு தகவல் பலகையில் விவரங்களை முறையாக காட்சிப்படுத்த வேண்டும்.

ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயிலை வாரத்துக்கு இருமுறை இயக்க வேண்டும். தருமபுரியிலிருந்து நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை வழித்தடத்தில் விரைவு ரயில்கள் இயக்க வேண்டும். எழும்பூரிலிருந்து சேலம்வரை இயக்கப்படும் விரைவு ரயில் சேவையை தருமபுரிவரை நீட்டித்து, மீண்டும் தருமபுரியிலிருந்து எழும்பூருக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments