FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

காவேரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

23 செப்டம்பர் 2026, 3:30 am IST
- கோப்புப்படம்
பகிர்:

காவேரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா், மேற்கொண்ட சோதனையில் எந்தவிதமாக கூடுதல் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. மேலும், பணியாளா்களின் இணையவழி பணப் பரிமாற்றம் குறித்து விசாரணை மேற்கொண்டனா். பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், மேஜைகள், கோப்புகளை ஆய்வு செய்தனா். பேரூராட்சி செயலாளா் ராணி மற்றும் ஊழியா்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனா். சுமாா் 3.30 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments