அரசின் விருது பெற்ற நல்லாசிரியர்களுக்குப் பாராட்டு
ராசிபுரம் ரோட்டரி கிளப் ஆப் ராயல் சார்பில் ஆசிரியர் தினவிழாவில் அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
ராசிபுரம் ரோட்டரி கிளப் ஆப் ராயல் சார்பில் ஆசிரியர் தினவிழாவில் அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு கிளப் தலைவர் எஸ். அசோக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ஆர். ரவிக்குமார், பொருளாளர் எஸ்.இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் எஸ். பிரகாஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இதில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களை கெளரவிக்கும் விதமாக ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் கிளப் சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இதில் புதுச்சத்திரம் அரசுப் பள்ளித் தலைமையாசியர்கள் ராஜம், காரைகுறிச்சிபுதூர் ஸ்ரீதரன், ஆர்.புதுப்பாளையம் அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர் இமயதாண்டவ பூபதி, சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற கொல்லிமலை மாதிரிப் பள்ளி ஆசிரியர் கை. பெரியசாமி உள்ளிட்டோர் விழாவில் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். இதேபோல தமிழக அரசின் காமராசர் விருதுபெற்ற தேசிய பெண்கள் மேல்நிலை பள்ளி சார்ந்த மாணவி தமிழ்ச்செல்வி, விழாவில் கௌரவிக்கப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதையடுத்து இன்ஜினியர் தினம் கொண்டாடப்பட்டது ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் சங்க உறுப்பினர்கள் இன்ஜினியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். பின்னர் விருதுபெற்ற ஆசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.