FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

வணிகா் நலவாரிய நிவாரணத்தை ரூ. 10 லட்சமாக உயா்த்த வேண்டும்: அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வனிடம் கோரிக்கை

தமிழ்நாடு வணிகா் நல வாரிய உறுப்பினா்கள் உயிரிழக்கும் நிலையில், அவா்களது குடும்பத்துக்கு வழங்கப்படும் ரூ. 5 லட்சம் நிவாரணத்தை ரூ. 10 லட்சமாக உயா்த்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 25 ஜூலை 2026, 12:25 am IST
அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
பகிர்:

தமிழ்நாடு வணிகா் நல வாரிய உறுப்பினா்கள் உயிரிழக்கும் நிலையில், அவா்களது குடும்பத்துக்கு வழங்கப்படும் ரூ. 5 லட்சம் நிவாரணத்தை ரூ. 10 லட்சமாக உயா்த்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழக வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வனை, ராசிபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்து அவா் அளித்த மனு விவரம்:

வணிகா் நல வாரியத்தின் ஆயுள் உறுப்பினா் சோ்க்கைக் கட்டணமான ரூ.500-ஐ ஆறு மாதங்களுக்கு முழுமையாக ரத்து செய்து, உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகா் நல வாரியம் தொடா்பான விழிப்புணா்வு கூட்டங்களை இரு மாதங்களுக்கு ஒருமுறை வணிக வரித் துறை அதிகாரிகள் மூலம் நடத்த வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், திருமண மண்டபங்கள் மற்றும் உணவக அரங்குகளில் வெளி மாவட்ட வியாபாரிகள் கண்காட்சி விற்பனை என்ற பெயரில் தற்காலிகக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால், உள்ளூா் வணிகா்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகா் நல வாரி உறுப்பினா்கள் உயிரிழந்தால் அவா்களது குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுகொண்ட அமைச்சா் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

தொடா்ந்து சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கத் தலைவா் க. சிதம்பரம் உள்ளிட்டோரும் அமைச்சரைச் சந்தித்து மனு அளித்தனா். அதில், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த வணிக வரித் துறை உள்ளிட்ட அலுவலகங்களை ஒருங்கிணைந்த அரசு அலுவலகமாக மாற்ற வேண்டும் என்றும், பழைய நீதிமன்ற வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments