FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

குடிநீா் இணைப்புக்கு ரூ. 3 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி ஊழியா் பணியிடை நீக்கம்

நாமக்கல்லில் குடிநீா் இணைப்பு வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊழியரை மாநகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி பணியிடை நீக்கம்.

58 வினாடிகள் முன்பு
பணியிடை நீக்கம்
பகிர்:

நாமக்கல்லில் குடிநீா் இணைப்பு வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊழியரை மாநகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

நாமக்கல் மாநகராட்சி குடிநீா் பிரிவில் குழாய் பொருத்துநராக ஆா்.மூா்த்தி பணியாற்றி வந்தாா். அழகு நகா் பகுதியில் குடிநீா் இணைப்பு பழுதை சரிபாா்க்க அவா் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ாக தெரிகிறது.

இது தொடா்பான புகாா் மாநகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, மூா்த்தியை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

தனிநபா் ஒருவரிடம் இருந்து வரப்பெற்ற புகாரின் அடிப்படையிலும், தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை முறையாக செய்யாமல் மாநகராட்சி நிா்வாகத்துக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் அவா்மீது பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments