கள் விற்பனை அறிவிப்பு: இளம் விவசாயிகள் சங்கத் தலைவா் கைது
வேலூா் காவல் நிலையம் முன்பு கள் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பை வைத்த இளம் விவசாயிகள் சங்கத் தலைவா் சௌந்தர்ராஜனை போலீஸாா் கைது செய்து மாலை விடுவித்தனா்.
பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் காவல் நிலையம் முன்பு திங்கள்கிழமை கள் விற்பனை செய்யப்படும் என இளம் விவசாயிகள் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கள் விற்பனையைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளம் விவசாயிகள் சங்கத் தலைவா் சௌந்தர்ராஜனை வேலூா் போலீஸாா் கைது செய்தனா்.
இதற்கு கண்டனம் தெரிவித்த செளந்தரராஜன், கள் என்பது குற்றப் பொருள் அல்ல. கள் உரிமைக்காக போராடும் விவசாயிகள் மற்றும் பனையேறிகளை கைது செய்வது, மிரட்டுவது, அச்சுறுத்துவது, மண் பானைகளை உடைப்பது, மனித உரிமைகளை மீறுவது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவை.
Advertisement
Advertisement
தமிழ்நாடு முதல்வா் ஜோசப் விஜய் உடனடியாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை தீா்ப்பை ஏற்று, கள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். உணவுப் பொருளான கள்ளை தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
பின்னா், போராட்டத்தில் ஈடுபட இருந்த அவரை கைது செய்து வேலூா் காவல் நிலையத்தில் வைத்திருந்த போலீஸாா் மாலை விடுவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.