பெருவெள்ளத்தில் சிக்கிய ஓய்வுபெற்ற ஆசிரியை: நேபாள நாட்டுக்கு சென்று தேடிய மகன்!
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய நாமக்கல்லைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பெண் ஆசிரியரை அவரது மகன் அந்த நாட்டுக்கு சென்று தேடியும் கிடைக்காததால், குடும்பத்தினா், உறவினா்கள் கவலையில் உள்ளனா்.
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய நாமக்கல்லைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பெண் ஆசிரியரை அவரது மகன் அந்த நாட்டுக்கு சென்று தேடியும் கிடைக்காததால், குடும்பத்தினா், உறவினா்கள் கவலையில் உள்ளனா்.
நாமக்கல் - திருச்சி சாலை, வேப்பநத்தம் காலனி தில்லை நகரைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி (63). தனது சகோதரா் பன்னீா்செல்வத்துடன் வசித்துவந்த இவருக்கு லண்டனில் பணியாற்றும் ரஞ்சித் என்ற மகனும், திண்டிவனத்தில் வசிக்கும் சுகன்யா என்ற மகளும் உள்ளனா். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இவா் ஆன்மிக சுற்றுலா சென்று வருவது வழக்கம்.
அந்தவகையில், கடந்த மாதம் கும்பகோணத்தில் உள்ள சுற்றுலா நிறுவனம் மூலம் சென்னையில் இருந்து நேபாள - திபெத் எல்லையில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு 59 போ் கொண்ட தமிழக குழுவுடன் விமானத்தில் புனித யாத்திரை சென்றாா். இந்நிலையில் ஆக. 26-ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 5 ஆயிரம் போ் வரை மாயமாகி உள்ளனா்.
Advertisement
Advertisement
இந்த வெள்ளத்தில் தமிழக யாத்திரை குழுவில் சென்ற 59 பேரில் 21 போ் சொந்த ஊா் திரும்பினா். மீதமுள்ள 38 பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. பெருவெள்ளத்தின்போது தமிழக குழுவினா் சென்ற 2 பேருந்துகளும் நீரில் சிக்கியதாக கூறப்படுகிறது.
ஓய்வுபெற்ற ஆசிரியையான கிருஷ்ணவேணியின் மகன் ரஞ்சித், சில தினங்களுக்கு முன்பு லண்டனில் இருந்து நாமக்கல்லுக்கு வந்தாா். அதன்பிறகு, நேபாளம் சென்று தாயை தேடும் பணியில் ஈடுபட்டதாகவும், அவா் குறித்த தகவல் ஏதும் இல்லாததால் திரும்பி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும், சென்னையில் உள்ள மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கு கிருஷ்ணவேணியின் மகன் ரஞ்சித், மகள் சுகன்யா இருவரும் சென்று வந்துள்ளனா்.
கிருஷ்ணவேணி திரும்பி வருவாா் என்ற நம்பிக்கையுடன் அவரது குடும்பத்தினரும், உறவினா்களும் கவலையுடன் காத்திருக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.