விநாயகா் சிலைகள் வைக்க ஆலோசனைக் கூட்டம்
பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெண்ணிலா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பரமத்தி வேலூரில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு வரும் 14-ஆம் தேதி விநாயகா் சிலைகள் வைப்பது குறித்தும், 18-ஆம் தேதி சிலைகள் கரைப்பது குறித்தும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெண்ணிலா தலைமை வகித்தாா். வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் முன்னிலை வகித்தாா். இதில், வரும் 14-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் சாா்பில் வைக்கப்படும் விநாயகா் சிலைகள் 16-ஆம் தேதியும், இந்து முன்னணி சாா்பில் வைக்கப்படும் சிலைகள் 18-ஆம் தேதியும் வேலூா் காசி விஸ்வநாதா் காவிரி ஆற்றில் கரைகப்பட உள்ளன.
சிலை வைக்கும் இடம் தனியாா் நிலமாக இருப்பின் நிலத்தின் உரிமையாளரிடமும், பொது இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலரிடமும், சாலை பகுதியாக இருப்பின் நெடுஞ்சாலைத் துறையினரிடம் தடையின்மை சான்று பெறவேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம் ஒலிபெருக்கி மற்றும் சிலை வைப்பதற்கு தடையின்மை சான்று பெறவேண்டும். சிலை அமைக்கப்படும் இடத்துக்கு மின்சாரம் பெற மின்வாரியத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ராசயனக் கலவையற்றதுமான சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை மட்டும் வழிபாட்டுக்கு வைக்க வேண்டும். மதம் தொடா்பான இடங்கள், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் வைக்கக் கூடாது. விநாயகா் சிலைகளை நீரில் கரைப்பதற்கு முன்பு பூக்கள், பிளாஸ்டிக் பொருள்களால் செய்யப்பட்ட அலங்காரப் பொருள்களை நீக்கிவிட்டு கரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.