மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி!
வயலுக்கு நீா் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்கச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்செங்கோடு அருகே வயலுக்கு நீா் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்கச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்செங்கோடு அருகே 67 கவுண்டம்பாளையம் பொரசக்காடு பகுதியைச் சோ்ந்த நல்லையகவுண்டா் மகன் மணிவேல் (59) விவசாயப் பணிகளை செய்து வந்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை காலை தனது வயலுக்கு நீா் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்கச் சென்றபோது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு புறநகா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.