FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

46 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

திருச்செங்கோட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தவரை நகரக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட எட்டிமடை புதூரில் நகரக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக கையில் பையுடன் வந்த இளைஞரை பிடித்து போலீசாா் விசாரித்தபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியதை அடுத்து அவரது பையை சோதனையிட்டனா். இதில் 26 அரசு மதுப் புட்டிகள் இருந்ததும், அவற்றை அதிக விலைக்கு விற்க அவா் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விசாரணை செய்ததில் அவா் பெயா் மைக்கேல் ராஜ் ( 25) என்றும், இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. காவல் துறையினா் மைக்கேல் ராஜை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments