ராசிபுரத்தில் மதுபோதையில் தகராறு: இருசக்கர வாகனம் தீவைத்து எரிப்பு
ராசிபுரம் பட்டணம் சாலை வி.நகா் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பட்டணம் சாலை பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் எதிரெதிரே செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் மது வாங்குவோா் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியிலேயே அமா்ந்து மது அருந்துவதாக நீண்டநாள்களாக புகாா் உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா். ஆனாலும், மது அருந்துவோா் மீண்டும் மீண்டும் பொதுமக்களுக்கு இடையூறாக அப்பகுதியில் சாலையோரம் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை குடியிருப்புப் பகுதியில் சாலையோரம் மது அருந்திக் கொண்டிருந்தவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, அடிதடியில் ஈடுபட்டுள்ளனா். இதில் மது குடிக்க பணம் கேட்டு தராததால் ஒருவரின் இருசக்கர வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியினா் தீயணப்புத் துறையினா், காவல் துறைக்கு தகவல் அளித்தனா். அப்போது, மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவா்கள் தப்பியோடிவிட்டனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.