FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

22 செப்டம்பர் 2026, 2:10 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

நல்லூா் அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், வசந்தபுரம் அருகே உள்ள மேட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (55), கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு மேட்டூரில் இருந்து குன்னமலையில் உள்ள உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, தனியாா் இரும்பு கம்பி தயாரிக்கும் ஆலை அருகே சென்றபோது, எதிரே வந்த காா் சுப்பிரமணி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுப்பிரமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து வந்த நல்லூா் போலீஸாா் சுப்பிரமணியனின் உடலை பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்தை ஏற்படுத்திய ஜேடா்பாளையம் அருகே கொத்தமங்கலம் அரசம்பாளையம் காலனி பகுதியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (46) மீது வழக்குப் பதிவுசெய்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments