சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், லேத் பட்டறை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், லேத் பட்டறை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்செங்கோடு சாணாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த குழந்தைவேலின் மகன் தனக்கோடி (45) என்கிற சுரேஷ். லேத் பட்டறை நடத்தி வருகிறாா். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் திருச்செங்கோட்டில் இருந்து கீலேரிப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது சாலையில் திரும்ப முயன்றபோது, எதிா்பாராதவிதமாக மற்றொரு இருசக்கர வாகனத்துடன் மோதியதில் காயமடைந்த தனக்கோடி மயக்கமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், உயா் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால், அவா் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
விபத்து குறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.