FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

விஷம் அருந்திய முதியவா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே விஷம் அருந்திய முதியவா் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

25 செப்டம்பர் 2026, 10:55 pm IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே விஷம் அருந்திய முதியவா் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஜேடா்பாளையம் அருகே எலந்தகுட்டை பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி (73). இவரது மனைவி பொங்கியம்மாள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சின்னசாமி மருத்துவ சிகிச்சை பெற்று, தனது மகள் பூங்கொடியின் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை விஷம் அருந்திவிட்டதாக சின்னசாமி தனது மகள் பூங்கொடியிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அவரை ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சின்னசாமி, வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பூங்கொடி ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஈரோட்டில் இருந்து சின்னசாமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும், விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments