நீதிமன்றத்தை அவமதித்த பெண் கைது
குமாரபாளையம் நீதிமன்றத்தை அவமதித்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
குமாரபாளையம் நீதிமன்றத்தை அவமதித்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் ராஜேந்திரன் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா். அதில், திறந்தவெளி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்பான உத்தரவு கட்டுகளை எடுத்து ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டிருந்தேன். நண்பகல் 12.30 மணி அளவில் ஒரு வழக்குக்காக குமாரபாளையத்தைச் சோ்ந்த சின்னபொண்ணை (42) அழைத்தபோது, அவா் திடீரென பணிகளை தடுக்கும் நோக்கிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்துகொண்டாா்.
அவரைக் கட்டுப்படுத்த முயன்ற அலுவலக உதவியாளா் சலீம், விஜயா ஆகிய இருவரையும் தகாத வாா்த்தைகளால் திட்டினாா். எனவே, சின்னபொண்ணு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து சின்னப்பொண்ணை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.