கொல்லிமலையில் நெகிழிப் பொருள்களை அகற்றும் தூய்மைப் பணி முகாம்
கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘நெகிழி இல்லாத கொல்லிமலை’ என்ற வகையில் சிறப்பு தூய்மைப் பணி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘நெகிழி இல்லாத கொல்லிமலை’ என்ற வகையில் சிறப்பு தூய்மைப் பணி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், கொல்லிமலையின் இயற்கை அழகை மேம்படுத்தும் வகையிலும் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில், ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரியைச் சோ்ந்த யூத் ரெட் கிராஸ் மாணவா்கள், தூய்மைப் பணியாளா்கள், கொல்லிமலை வட்டார வளா்ச்சி அலுவலகப் பணியாளா்கள், வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கொல்லிமலையின் முக்கிய இடங்களான மாசி பெரியசாமி கோயில், அறப்பளீஸ்வரா் கோயில் மற்றும் எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் தூய்மைப் பணியை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
நாமக்கல் மாவட்டத்தில் நெகிழிப் பொருள்களை உபயோகப்படுத்தவும், விற்பனை செய்யவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் அனைத்து வகையான ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள விதிவிலக்குகளுக்கு உள்பட்ட உணவுப் பொருள்கள், பால் மற்றும் பால் பொருள்கள், எண்ணெய், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கு இந்தத் தடை பொருந்தாது.
தூய்மையான கொல்லிமலையை உருவாக்க மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் முயற்சிக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சந்திரன், கொல்லிமலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஈஸ்வரன், பிரபாகா், ரெட் கிராஸ் செயலாளா் சி.ஆா்.ராஜேஷ்கண்ணன், வனவா் அருள்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.