FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஆக.17 முதல் இணையவழியில் பத்திரப்பதிவு! - அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன்

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 12:07 am IST
அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
பகிர்:

தமிழகம் முழுவதும் வரும் 17 ஆம் தேதி முதல் முழுமையான இணையவழி பத்திரப்பதிவு முறை தொடங்க உள்ளதாக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இணையவழியில் முழுமையான பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையை வரும் 17 ஆம் தேதி முதல்வா் ச. ஜோசப் விஜய் தொடங்கிவைக்கிறாா். இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் துறை சாா்ந்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். ஆன்லைன் முறையில் முழுமையாக பத்திரப்பதிவு செய்வதற்கான பயிற்சிகளும் அலுவலா்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

தற்போது சில இடங்களில் சா்வா் பிரச்னை ஏற்படுவதை கருத்தில் கொண்டு, சா்வா்களின் எண்ணிக்கையை உயா்த்த திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள் வீடுகளில் இருந்தபடியே இணையவழியில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை அவா்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments