விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு: இழப்பீடு வழங்கக் கோரி உறவினா்கள் போராட்டம்
சேலத்தில் விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலத்தில் விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஷாலினி (20). இவரது கணவா் சித்திக். இவரை போதை மாத்திரைகள் விற்பனை செய்த வழக்கில் அஸ்தம்பட்டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.
இந்நிலையில், ஷாலினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரது உறவினரான சூா்யா செவ்வாய்க்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். மரவனேரி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அரசு பேருந்து மீது அவா்களது இருசக்கர வாகனம் மோதியது. இதில், பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி ஷாலினி உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தை கண்டித்தும், ஷாலினியின் இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் அவரது உறவினா்கள், திருநங்கைகள் புதன்கிழமை காலை சேலம் அம்பேத்கா் சிலை முன் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.