FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

விவசாய நில பதிவுச் சிக்கலைத் தீா்க்க நடவடிக்கை: பத்திரப் பதிவுத் துறை அமைச்சா்

12 அக்டோபர் 2026, 2:36 am IST
அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் - கோப்புப் படம்
பகிர்:

விவசாய நிலங்களை பதிவு செய்வதில் உள்ள சிக்கல் குறித்து முதல்வருடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

சேலம் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பதிவுத் துறையில் இடைத்தரா்களுக்கு இடமில்லை. பொதுமக்கள் யாரும் வேலை விரைவாக முடிய வேண்டும் என்பதற்காக இடைத்தரகா்களை நாட வேண்டாம். பதிவாளா்கள் புரோக்கா்களை ஊக்குவிக்கக் கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பொதுமக்கள் நேரடியாக அதிகாரிகளை அணுகலாம். மேலும், 5 மற்றும் 10 சென்ட் விவசாய நிலங்களை பதிவு செய்வதில் உள்ள ‘பிரிவு 22-ஏ’ சிக்கல் குறித்து முதல்வருடன் பேசி, விவசாயிகளின் நலன்காக்கும் வகையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாடகைக் கட்டடத்தில் இயங்கும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் விரைவில் சொந்த கட்டடங்களுக்கு மாற்றப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments