FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வாழப்பாடியில் கல்லூரி மாணவி தற்கொலை!

வாழப்பாடியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டது பற்றி...

16 அக்டோபர் 2026, 11:15 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தோழியுடன் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதாச்சலத்தை சேர்ந்த தர்ஷினி (22). வாழப்பாடியில் அய்யாவுக் கவுண்டர் தெருவிலுள்ள விஜயா என்பவரது வீட்டில் தங்கி, அங்கிருந்து நாள்தோறும் மேட்டுப்பட்டியில் இயங்கும் தனியார் கல்லூரிக்கு சென்று பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார். அவருடன் அதே கல்லூரியில் படித்து வரும் அவரது தோழியான மற்றொரு மாணவியும் தங்கியிருந்தார்.

வியாழக்கிழமை மாலை கல்லூரியில் இருந்து தங்கியிருந்த வீட்டிற்கு திரும்பிய மாணவி தர்ஷினி, தோழியிடம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்த நிலையில், இரவு தூங்க சென்றுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை காலை கல்லூரி செல்வதற்கு புறப்படுவதற்காக, பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தோழி, மாணவி தர்ஷினியை எழுப்ப சென்றுள்ளார். கதவு தாழிட்டு இருந்தது. வெகு நேரம் கதவைத் தட்டியும் தர்ஷினி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த தோழி ஜன்னல் வழியாக பார்த்தபோது, தர்ஷினி துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு தொங்கியது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் விஜயா மற்றும் தங்களுக்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்த கல்லூரி ஆசிரியர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்த கதவை உடைத்து, ஜன்னல் கம்பியில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட மாணவி தர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோழியுடன் தங்கி இருந்த தனியார் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

summary

College student dies by suicide in Vazhapadi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments