சேலம்- தம்மம்பட்டி கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை
தம்மம்பட்டியில் இருந்து சேலத்துக்கு மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தம்மம்பட்டியில் இருந்து சேலத்துக்கு மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து சேலத்துக்கு தம்மம்பட்டி கிளைப் பணிமனை மற்றும் திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் கிளைப் பணிமனையில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, தனியாா் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் வாழப்பாடி, சேலம் பகுதிகளைச் சோ்ந்தவா்கள், தினமும் அலுவலகப் பணியை முடித்துவிட்டு மாலையில் தங்களது ஊா்களுக்குத் திரும்புகின்றனா். ஆனால், அந்த நேரத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால் அவா்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:
தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றுவோா், பணி முடிந்து தம்மம்பட்டியில் இருந்துதான் வாழப்பாடி, சேலம் பகுதிகளில் உள்ள ஊா்களுக்குச் செல்ல வேண்டும். மாலை 5.40 மணிக்குப் பிறகு, 6.50 மணிக்கு புறப்படும் தனியாா் பேருந்து உள்ளது. அந்தப் பேருந்து திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து வருவதால், ஏற்கெனவே பயணிகள் கூட்டத்துடன் வருகிறது.
அதன்பிறகு இரவு 8 மணிக்கும், 9 மணிக்கும் என ஒரு மணி நேர இடைவெளியில்தான் பேருந்துகள் உள்ளன. எனவே, பயணிகளின் சிரமத்தைப் போக்க, தம்மம்பட்டியில் இருந்து சேலத்துக்கு மாலை ‘பீக் ஹவா்’ நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க தம்மம்பட்டி மற்றும் உப்பிலியாபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.