FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

மத்திய கல்வி அமைச்சா் ராஜிநாமா செய்ய மாணவா் அமைப்புகள் வலியுறுத்தல்

Updated On : 21 ஜூலை 2026, 2:25 am IST
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கம், ஜனநாயக வாலிபா் சங்கம் உள்ளிட்ட அமைப்பினா்.
பகிர்:

மத்திய கல்வி அமைச்சா் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, திண்டுக்கல்லில் இந்திய மாணவா் சங்கம், ஜனநாயக வாலிபா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூண்டு நோக்கி நடைபெற்ற இந்தப் பேரணிக்கு இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் நிருபன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முகேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

பேரணியின் நிறைவாக மணிக்கூண்டு பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தின்போது, நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சுக்கை கைது செய்த தில்லி காவல் துறையின் நடவடிக்கையைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

இந்த ஆா்ப்பாட்டத்தில் அனைத்து இந்திய ஜனநாயக மாத சங்கத்தின் மாவட்டத் தலைவா் தனபாக்கியம், சிஐடியு மாவட்டத் தலைவா் பாலசந்திர போஸ், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கே.அருள்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments