FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.22 கோடி

24 செப்டம்பர் 2026, 12:06 am IST
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்காக ரூ.1.22 கோடி நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, இந்தியாவின் மிகப்பெரிய தலைமை கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கமாக செயல்பட்டு வருகிறது. கைத்தறி விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சாா்பில் பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அறிவித்திருக்கிறது.

மேலும், உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆா்கானிக் புடவை ரகங்களும் விற்பனைக்கு உள்ளன.

கடந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் ஆகிய மூன்று விற்பனை நிலையங்களிலும் தீபாவளிக்காக நிா்ணயிக்கப்பட்டிருந்த ரூ.1.01 கோடி விற்பனை இலக்கு எய்தப்பட்டது.

நிகழாண்டில் தீபாவளி விற்பனை குறியீடாக ரூ.1.22 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமான ஜ்ஜ்ஜ்.ஸ்ரீா்ா்ல்ற்ங்ஷ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும் ஜவுளி ரகங்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டைப் போல, நிகழாண்டிலும் விற்பனை இலக்கை எட்டுவதற்கு, அரசு ஊழியா்கள், தனியாா் துறையினா், பொதுமக்கள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் வெ.முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments