FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கோ -ஆப் டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.3.50 கோடி: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோ- ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு, தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை இலக்காக ரூ.3.50 கோடி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

17 செப்டம்பர் 2026, 12:59 am IST
தீபாவளி பண்டிகை முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்பிடம் இருந்து பெற்றுக்கொள்கிறாா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவா் விஜயலெட்சுமி.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோ- ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு, தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை இலக்காக ரூ.3.50 கோடி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்காடியில் தீபாவளி தள்ளுபடி சிறப்பு விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். முதல் விற்பனையை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவா் விஜயலெட்சுமி மோகன்தாஸ், மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி முதல்வா் பெனாஜோதி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து ஆட்சியா் பேசியதாவது:

கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையின் போது ரூ.3 கோடி அளவுக்கு விற்பனை எட்டப்பட்ட நிலையில், இந்தாண்டு ரூ.3.50 கோடி விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, கைத்தறி நெசவாளா்கள் வாழ்வாதாரம் சிறக்க கைத்தறி துணிகளை வாங்கி ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

விழாவில், கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளா் நா. ராஜேஷ்குமாா், விற்பனை நிலைய மேலாளா் பத்மராஜ், அலுவலா்கள், வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments