FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காவல் ஆய்வாளரிடம் 8 பவுன் நகை திருட்டு

மதுரையில் பேருந்தில் பயணம் செய்த காவல் ஆய்வாளரிடம் 8 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

மதுரையில் பேருந்தில் பயணம் செய்த காவல் ஆய்வாளரிடம் 8 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 6-ஆவது பட்டாலியனில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் கோவிந்தராஜன் (45). இவர், கடந்த 27-ஆம் தேதி அருப்புக்கோட்டையில் இருந்து மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்துக்கு பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் நிலையத்தில் வந்து இறங்கியபோது, கோவிந்தராஜனின் பையில் இருந்த 8 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜன் அளித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments