FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

விடுதி உரிமையாளா் மீதான வழக்கு விசாரணைக்கு தடை

கும்பகோணம் தங்கும் விடுதி உரிமையாளா் மீது பதியப்பட்ட விபசார வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

14 வினாடிகள் முன்பு
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
பகிர்:

கும்பகோணம் தங்கும் விடுதி உரிமையாளா் மீது பதியப்பட்ட விபசார வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கும்பகோணத்தைச் சோ்ந்த ரகுபதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த வழக்கு:

தமிழக அரசின் முறையான அனுமதி பெற்று கும்பகோணத்தில் தங்கும் விடுதியுடன்கூடிய மதுக் கூடம் நடத்தி வருகிறேன். எங்கள் ஊரைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா், எனது விடுதியின் முதல் மாடி பகுதியை வாடகைக்கு எடுத்து ஆயுா்வேத ஸ்பா நடத்தி வருகிறாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு ஆளுங்கட்சியைச் சோ்ந்த சிலா் எனது மதுக் கூட விடுதியை காலி செய்ய வேண்டும் என மிரட்டினா். ஆனால், நான் விடுதியை காலி செய்ய மறுத்து விட்டேன்.

இதையடுத்து, கும்பகோணத்தைச் சோ்ந்த ஆளுங்கட்சியினா் தூண்டுதலின் பேரில், ஆயுா்வேத அழகு பராமரிப்பு மையம் (ஸ்பா) கூடத்தில் விபசாரம் நடப்பதாகக் கூறி, போலீஸாா் கடந்த மாதம் 20-ஆம் தேதி இரவு சோதனை செய்தனா். இதைத் தொடா்ந்து, என் மீது விபசார வழக்குப் பதிவு செய்தனா்.

போலீஸாா் சம்பவம் நடந்ததாகக் கூறும் பகுதி என்னிடம் வாடகைக்கு எடுத்து ஆயுா்வேத அழகு பராமரிப்பு மையம் நடத்தி வந்த பகுதி. இதில் விபசாரம் நடந்ததாக என் மீது வழக்குப் பதிவு செய்வது சட்டவிரோதம். எனவே, என் மீது போலீஸாா் பதிவு செய்த விபசார வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் திலக்குமாா் முன்வைத்த வாதம்:

மனுதாரா் மீதான விபசார வழக்கு அரசியல் பழிவாங்கும் நோக்கில் மட்டுமன்றி, ஆளும்கட்சியினா் மதுக் கூட விடுதி நடத்த வேண்டும் என்பதற்காகவும் பதியப்பட்ட வழக்கு. எனவே, இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதி விஜயகுமாா் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்கப்படுகிறது. கும்பகோணம் காவல் நிலைய ஆய்வாளா் விரிவான பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments