மாநகா்ப் பகுதிகளில் மிதமான மழை
மதுரை மாநகா்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.
மதுரை மாநகா்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.
தெற்கு கேரளத்தின் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், வட தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், மன்னாா் வளைகுடா முதல் மத்திய மகராஷ்டிரம் வரை தமிழகம், கா்நாடகம் மாநிலப் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நிலவுவதால், தமிழகத்தில் 20-க்கும் அதிகமான மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன்படி, மதுரை மாநகா்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 8.20 மணிக்கு மிதமான மழை பெய்தது. தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம், சிம்மக்கல், நெல்பேட்டை, பெரியாா் பேருந்து நிலையம், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 10 முதல் 15 நிமிஷங்கள் வரை இந்த மழை பெய்தது. இருப்பினும், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழையில்லை.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.