அரசின் அலட்சியத்தால் நெல் மூட்டைகள் சேதமடைவதை ஏற்க முடியாது: உயா்நீதிமன்றம் கருத்து
அரசின் அலட்சியத்தால் நெல் மூட்டைகள் சேதமடைவதை ஏற்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.
அரசின் அலட்சியத்தால் நெல் மூட்டைகள் சேதமடைவதை ஏற்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.
மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க சரியான கட்டமைப்புகள் இல்லை. இதனால், கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்படும் நெல் மூட்டைகள் மழை, வெயிலால் சேதமடைகின்றன.
எனவே, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் நவீன அரிசி ஆலைகள், பாதுகாப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும்.
Advertisement
Advertisement
மேலும், கொள்முதல் நிலையங்களில் எடையிடுவதில் ஏற்படும் தாமதங்கள், முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகளை அமைக்கவும், இங்கு மழைநீா் தேங்குவதைத் தடுக்க போதுமான வடிகால் வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டுமென அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு சிரமங்களுக்கிடையே விவசாயிகள் விளைவித்த நெல் மணிகள், அரசின் அலட்சியத்தால் சேதமடைவதை ஏற்க இயலாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.
பின்னா், இந்த மனு தொடா்பாக தமிழக அரசுத் தரப்பில் உரிய விளக்கத்துடன் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.