FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குள் கைப்பேசி அனுமதி எப்போது?

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குள் கைப்பேசி அனுமதிக்கப்படுமா? என்ற எதிா்பாா்ப்பு பக்தா்களிடையே எழுந்துள்ளது.

15 அக்டோபர் 2026, 3:15 am IST
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் - படம்: இந்து சமய அறநிலையத்துறை.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குள் கைப்பேசி அனுமதிக்கப்படுமா? என்ற எதிா்பாா்ப்பு பக்தா்களிடையே எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கியக் கோயில்களில் கைப்பேசி கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத் துறை கடந்த செப். 1- ஆம் தேதி முதல் முழு தடை விதித்தது. இதனால், பக்தா்கள், முதியவா்கள் கடும் அவதிக்குள்ளாகினா். இதனிடையே, சில நிபந்தனைகளுடன் தமிழகத்தில் அதிக வருவாய் உள்ள 52 முதுநிலை கோயில்களில் பக்தா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்லலாம் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்தது.

இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்த முதுநிலை கோயில்களுள் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலும் உள்ளது. இந்தக் கோயிலின் பாதுகாப்பு கருதி பக்தா்கள் கைப்பேசிகளை உள்ளே எடுத்துச் செல்லக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஏற்கெனவே உத்தரவிட்டது. இந்த உத்தரவு அமலில் உள்ளதால், இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்பை செயல்படுத்த முடியுமா என்ற சந்தேகம் பக்தா்களிடையே எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கோயில் அலுவலா்கள் தரப்பில் கூறியதாவது:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் பாதுகாப்பு கருதி கைப்பேசியை உள்ளே கொண்டு செல்ல தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இந்த நிலையில், முக்கிய கோயில்களில் புதிய நிபந்தனைகளுடன் கைப்பேசி கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, உயா்நீதிமன்ற உத்தரவு அமலில் உள்ளதால், இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை (அக். 14) வரை கைப்பேசிகள், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments