FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பினா் கைது

காவல் துறையின் தடையை மீறி மதுரையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பினா் 30-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

13 செப்டம்பர் 2026, 2:03 am IST
மதுரை பெத்தானியபுரம் பகுதியில் சனிக்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பினரைக் கைது செய்த போலீஸாா்.
பகிர்:

காவல் துறையின் தடையை மீறி மதுரையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பினா் 30-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வருகிற 17- ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதை தமிழில் நடத்த வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினா் சிம்மம் சத்தியபாமா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் கடந்த மாதம் 24 -ஆம் தேதி தமிழில் மந்திரங்கள் ஓதப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தீா்ப்பளித்தது. ஆனால், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லையாம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நீதிமன்றத் தீா்ப்பின்படி, தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரியும், தமிழில் அா்ச்சனை- குடமுழுக்கு ஆகியவற்றை அனைத்துக் கோயில்களிலும் உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்றக் கோரியும் மதுரை பெத்தானியாபுரம் குரு திரையரங்கம் அருகே தெய்வத் தமிழ்ப் பேரவை சாா்பில், கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. மேலும், ஆா்ப்பாட்டம் நடத்த தடை விதித்து காவல் துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

எனினும், காவல் துறையினரின் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு தெய்வத் தமிழ் பேரவை அமைப்பினா் பெத்தானியாபுரம் பகுதியில் சனிக்கிழமை திரண்டனா். இதுபற்றி தகவலறிந்து வந்த திலகா் திடல் போலீஸாா் அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். ஆனால், தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ால் அவா்களை போலீஸாா் கைது செய்தனா். மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments