செவிலியர் தேர்வு எழுதச் சென்ற மணப்பெண் விபத்தில் பலி - மணமகன் படுகாயம்!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே காா் மோதியதில் மணப்பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே காா் மோதியதில் மணப்பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வெள்ளோடு பகுதியைச் சோ்ந்த சிமியோன் மகன் ஜெபபாஸ்டின் (29). காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம், காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சோ்ந்த மானுவேல் மகள் வென்சியாவுக்கும் (26) ஞாயிற்றுக்கிழமை(செப்.13) திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற செவிலியா் தோ்வை எழுதுவதற்காக வென்சியாவை ஜெப பாஸ்டின் இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு அழைத்து வந்தாா்.
Advertisement
Advertisement
திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் வாடிப்பட்டி அருகே சாணாா்பட்டி விலக்கில் வந்த போது, கோவையிலிருந்து மதுரைக்குச் சென்ற காா், சக்கரம் வெடித்ததில் நிலைதடுமாறி, இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த வென்சியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவலறிந்து வந்த வாடிப்பட்டி போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காயமடைந்த
ஜெப பாஸ்டினை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.