FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் கோபுரங்களுக்கு மாலைகள் அணிவிப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள 14 கோபுரங்களுக்கு நிலை மாலைகள் புதன்கிழமை அணிவிக்கப்பட்டன.

17 செப்டம்பர் 2026, 1:42 am IST
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சுவாமி சந்நிதி கிழக்கு ராஜ கோபுரத்தில் புதன்கிழமை அணிவிக்கப்பட்ட நிலை மாலை.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள 14 கோபுரங்களுக்கு நிலை மாலைகள் புதன்கிழமை அணிவிக்கப்பட்டன.

இந்தக் கோயிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரா் தங்க விமானங்கள் உள்பட மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. குடமுழுக்கை முன்னிட்டு, அனைத்து கோபுரங்களுக்கும் நிலை மாலைகள் அணிவிக்க முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே, கடந்த சில தினங்களாக சுமாா் 2 டன் அளவிலான சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு மலா்கள் மூலம் மாலைகள் கட்டும் பணியில் ஏராளமான தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தங்க விமானங்கள், ராஜ கோபுரங்கள் உள்பட 14 கோபுரங்களுக்கும் புதன்கிழமை நிலை மாலைகள் அணிவிக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments