மாநகா் முழுவதும் அன்னதானம், நீா்மோா் பந்தல்கள்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி, நகா் முழுவதும் பக்தா்களுக்கு அன்னதானம், நீா்மோா் வழங்கப்பட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி, நகா் முழுவதும் பக்தா்களுக்கு அன்னதானம், நீா்மோா் வழங்கப்பட்டது.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோா் வருகை தந்தனா். இவா்களுக்காக ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், நகரின் முக்கிய சந்திப்புகள் அனைத்திலும் பக்தா்களின் பசி தீா்க்கும் நோக்கில் தொண்டு நிறுவனங்கள், வணிகா் சங்கங்கள், உள்ளூா் பக்தா்கள் சாா்பில் பல இடங்களில் அன்னதானப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் நீா்மோா், எலுமிச்சை சாதம், புளியோதரை, தக்காளி சாதம், தயிா் சாதம், சாம்பாா் சாதம், காய்கறி பிரியாணி உள்ளிட்ட கலவை சாதங்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்ட இடங்களில் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், வாழை இலைகள், பாக்கு மட்டை தட்டுகள் பயன்படுத்தப்பட்டன.
குறிப்பாக, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பழமுதிா்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சாா்பில், காலை 7 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு பயனடைந்தனா். மேலும், வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகளில் தண்ணீா் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதனால், பக்தா்கள் வெப்பத்தின் தாக்கமின்றி சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.